Monday, July 4, 2011
Monday, February 21, 2011
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் 1957 ‘ம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று காஞ்சிபுரத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியது அருமை. தெய்வ பக்தியையும்,தேச பக்தியையும் தன் இரு கண்களாக எண்ணிய பசும்பொன்முத்துராமலிங்கத் தேவரின் உரையை வெங்கடேசன் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பசும் பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை
‘தமிழ் அபிமானம் வேண்டும், தமிழ்நாடு வாழ வேண்டும் ‘ என்று கூறிக்கொண்டு ஒரு கூட்டம் தேர்தலில் போட்டியிடுகிறது. தமிழ் அபிமானம் வேண்டியதுதான். ஆனால் இவர்கள் தமிழின் மேல் அபிமானம் கொண்டாடுகிற முறை எப்படியிருக்கிறது என்றால்,
அவர்கள் பொதுக்கூட்டங்கள் நடத்துகிறபோது, ‘வட இந்தியர்கள், தென்னிந்தியர்கள்; வடநாடு, தென்னாடு ‘ என்று பிரிப்பதிலேயே குறியாய் இருக்கிறது. அப்படிப் பார்க்கிறபோது ஜின்னா பார்க்கில் கூட்டம் நடை பெறுகிறது என்கிறார்கள். அடுத்தாற்போல் ராபின்சன் பார்க்கில் நடைபெற்றால் ராபின்சன் பார்க் என்று போடுகிறார்கள்.அதே நேரத்தில் திலகர் கட்டத்தில் கூட்டம் நடைபெறுகிறது என்றால் அவர் பெயரைச் சொல்ல இவர்களுக்குக் கோபம் வருகிறது. வட இந்தியர் என்று சொல்லி அவர் பெயரைப் போடாமல் தந்தை திடலில் நடை பெறுகிறது என்று போடுகிறார்கள்.
(கிண்டலாக ஆங்கிலத்துக்கு மாறி)
In what way Jinnah is not a North Indian ? How is the [i]names Jinnah and Robinson so sweet to you Sir ? How is [/i]
the name of poor Tilak so bitter to you Sir ? I am not [i]able to understand. [/i]
ஜின்னா எந்த வகையில் வட இந்தியன் அல்ல; எந்த வகையில் ராபின்சன் என்ற வெள்ளைக்காரன் உங்களுக்கு வேண்டியவன் ? திலகர் பெயர் மாத்திரம் உங்களுக்குக் கசப்பாக இருப்பானேன் ? இது இந்த நாட்டு அரசியலுக்கு விரோதமாக நீங்கள் செய்யும் தேசத் துரோகம் அல்லவா ?
ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்த கூட்டத்தில் வந்த எண்ணம் என்பதைத் தவிர வேறு எதைக் காட்டுகிறது ? அதற்கு மேல் ‘வடநாட்டான் திராவிட நாட்டை சுரண்டுகிறான். வட இந்தியன் பெயர் இந்த நாட்டில் இருக்க வேண்டாம். இருந்தால் போராடி மாற்றுவோம் ‘ என்று சொல்கிறார்கள்.மிக்க மகிழ்ச்சி.
டால்மியாபுரம் என்ற பெயரை மாற்றப் போராடிய நீங்கள் நான் எடுத்துச் சொன்ன ஹார்விபட்டி என்ற பெயரை மாற்ற ஏன் சத்தியாகிரகம் பண்ணவில்லை ? வெள்ளைக்காரன் பெயர் இருக்கலாம்; அதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கணும். அதே நேரத்தில் ‘டால்மியாபுரம் ‘ என்ற பெயர் போகணும் என்றால் அறிவுடையவன் கேட்பானா ? ஹார்வி மில்லில் பட்டிவீரன்பட்டி செளந்தரபாண்டியன் வகையறா பங்கு இருக்கிறது. அந்த செளந்தரபாண்டியன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தந்தையாக இருந்ததால், ஹார்விபட்டி என்ற பெயரை மாற்ற வேண்டுமென்று சொன்னால் உங்கள் கட்சிக்குப் பணம் வராது.ஆகையால் தமிழ் என்ற பெயரால் மக்களிடம் உண்மையை மறைப்பதில் பிரயோசனம் இல்லை. இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் அதனுடைய ரகசியம்.
அதற்குமேல் திராவிடநாடு என்று கோஷிக்கிறார்கள். திராவிட நாடு யார்கிட்டே கேட்கிறாய் ? முறையாக இருந்து வெள்ளையன் நம்மை அடிமையாக வைத்திருந்த காலத்தில், சுதந்திரப்போரில் மக்கள் பக்கத்தில் இருந்திருந்தால் கேட்க உரிமை இருக்கிறது என்றாவது சொல்லலாம்.வெள்ளையனை எதிர்த்துப் போராட்டம் நடைபெற்றபோது வெள்ளைக்கார சர்க்காரிடம் கைக்கூலி வாங்கிக் கொண்டு, அவனுக்கு அனுகூலமாக யுத்த ‘புரபகண்டா ‘ ‘செய்துவிட்டு, இப்போது திராவிடநாடு கேட்டால் என்ன அர்த்தம் ? பாகிஸ்தான் கேட்டு வாங்கி அவன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டது மாதிரி, நீ வெள்ளைக்காரனுக்கு ஐந்தாம் படையை அமைப்பாய். அப்படி ஏமாற நாங்கள் பைத்தியக்காரர்கள் அல்ல.
‘தமிழ் வேண்டும் ஹிந்தி வேண்டாம் ‘ என்கிறார்கள். 1937-லேயே ஹிந்தி எதிர்ப்பு வருகிறபோது, ‘ஹிந்தியைப் புகுத்தாதே ‘ என ராஜகோபாலாச்சாரியர் மந்திரி சபைக்குச் சொன்னவன் அடியேன். இது சரித்திரம். எங்கள் அரசாட்சி அமைந்தால் ‘தமிழ் மாகாணம் ‘ என்று பெயர் வைப்போம். Residuary Madras State என்கிற பெயரை எடுப்பதில் பின்னடைந்தவர்கள் அல்ல நாங்கள். ஆனால் தமிழ் என்பதன் பெயராலும், தமிழ் உரிமையைக் காப்பாற்றுகிறோம் என்கிற பெயராலும் தமிழன் நாகரீகத்தைக் கெடுக்கக்கூடிய போராட்டங்களையும், பிராமணர் பிராமணர் அல்லாதார் என்று
சொல்லிக் கொண்டு நாஸ்திகத்தை வளர்ப்பதையும் நாங்கள் ‘ரோமாபுரி ராணி ‘ என்ற கதையை எழுதுவதா நீ பிராமணர் அல்லாதோரைக் காப்பாற்றுகிற யோக்யதை ?
எத்தனை பள்ளிக்கூடப் பையன்களை பாழாக்கி இருக்கிறாய் இதைப் போன்ற கதைகளை எழுதி ? ரோமாபுரி ராணி கதை போதாது என்று ‘தங்கையின் காதல் ‘ என்று ஒரு கதை
எழுதியிருக்கிறாய். தங்கையைக் கண்டு காதல் கொள்ளுகிறான் அண்ணன் என்று எழுதியிருக்கிறாய்.அடுத்து மகன் தாயைத் தாலிகட்ட வேண்டியதுதானே ? வேறு என்ன ?
இதுவா தமிழ் நாகரீகம் ? சின்னச்சின்ன பள்ளிப் பிள்ளைகளைப் பாழாக்கி நாட்டை மிக
விபரீதமான பாதைக்குக் கொண்டு போகக்கூடிய இத்தகைய கட்சிகளை, தாங்கள் தேர்தலில் ஆதரிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி ம.வெங்கடேசன்
(இப்படிப் பல சுவையான தகவல்கள் இருக்கும் இந்தப் புத்தகம், திராவிட இயக்கங்களின் பித்தலாட்டங்களை, ஏமாற்று வேலைகளை ஆவணப் படுத்துகிறது. தமிழ்நாட்டைப் பாழ்படுத்திய அரசியல்வாதிகளின் மறுபக்கத்தை அறிய விழைபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் ‘ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்)
Friday, February 18, 2011
என் அம்மா!
என் அம்மா!
மீண்டும் ஒரு முறை வேண்டும் அம்மா -உன் கருவறை!
என்றும் நான் மழலை அம்மா -நீ வாழும் வரை!
இரவிலும் பகலிலும் என்னகென துடித்தை!
கனவிலும் நான்
அழுதால்
திடுக்கிட்டு
விழித்தாய்!
எந்த தவமும்
நான் - செய்ய வில்லை
உன்னை பெறுவதற்கு !
இனி
எந்த வரமும் தேவை இல்லை - போதும் நீ என்னக்கு!
கடவுள் கொடுத்த
கருணை யாவும் உன் - கண்ணில் ஒளிர்கிறது !
எந்த உலகம்
மறந்த பாசம் நேசம் உன்னுள்
இருக்கிறது !
என்னை பத்து மாதம் உன்னக்குள் வைத்தாய்!
உன் உயிரை பிடித்து
எனக்கு அழைப்பு
விடுத்தாய் !
உன் தியாகம் சொல்ல மொழிகள்
இல்லை !
உன்னை போல ஒரு ஜீவன் இல்லை !
மீண்டும் ஒரு முறை வேண்டும்
அம்மா -உன் கருவறை !
- ஒரு இணையத்தில் இருந்து எடுத்தது
Tuesday, February 15, 2011
இதுதாங்க... ஆர்.எஸ்.எஸ்.
Friday, December 3, 2010
GOLDEN WORDS OF SWAMI VIVEKANANDA
The Biggest collections of Swami Vivekananda Quotes
When there is a conflict between the heart and the brain, let the heart be followed.
A man of intellect can turn into a devil, but never a man of heart.
Religion is not a theoretical need but a practical necessity.
Renunciation does not mean simply dispassion for the world. It means dispassion for the world and also longing for God.
There is no misery where there is no want.
The secret of life is not enjoyment, but education through experience.
Every new thought must create opposition.
Renunciation is the withdrawal of mind from other things and concentrating it on God.
Every man who thinks ahead of his time is sure to be misunderstood.
In this short life there is no time for the exchange of compliments.
Do not wait to cross the river when the water has all run down.
For more Quotes Download below
DOWNLOAD
Tuesday, November 30, 2010
பராக் ஒபாமா பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரை
இந்தியாவிற்கு வருகை தந்த பராக் ஒபாமா அவர்கள்
இந்திய பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரையில் சுவாமி விவேகானந்தரைப் பற்றிக் குறிப்பிட்டார்.
வேற்றுமைக்கு பதிலாக அவர் இந்தியாவின் பலத்தைக் காண்பித்தார் - இந்தியா பற்றியக் கருத்தை மாற்றினார் - அனைத்து ஜாதி, நிறம், மதநம்பிக்கையை, ஒருங்கிணைத்தார் -இன்றைய கழக வேற்றுமையை விவரமாக விளக்கினார். மிகவும் மதிப்புமிக்கவர், நம்பிக்கையானவர், என்னுடைய சொந்த ஊர்ராகிய சிக்காகோவிற்கு நூறு வருடங்களுக்கு முன்பு விஜயம் செய்தார். அவர் புகழ்ப்பெற்ற சுவாமி விவேகானந்தர் .
புனிதம், தூய்மை, அறம், ஆகியவை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டும் சொந்தம் இல்லை. மற்றும் உயர்ந்த நற்ப்பன்புகளை உடைய ஆண்களையும், பெண்களையும் உருவாக்குவதே அனைத்து அமைப்புகளின் நோக்கம் என்று கூறினார்.
ஆங்கிலத்தில்
Instead of succumbing to division, you have shown that the strength of India - the very idea of India - is its embrace of all colours, castes and creeds. It's the diversity represented in this chamber today. It's the richness of faiths celebrated by a visitor to my hometown of Chicago more than a century ago - the renowned Swami Vivekananda. He said that, "holiness, purity and charity are not the exclusive possessions of any church in the world, and that every system has produced men and women of the most exalted character."
முழு உரையையும் காண
Obama's address to Parliament
Video
Obama's address to Parliament
Wednesday, November 17, 2010
MANASE RELAX PLEASE - சுவாமி சுகபோதானந்தா
சுவாமி சுகபோதானந்தா
தெளிவு பெற்ற ஓர் ஆன்மீக குரு. "LIFE" (Living in Freedom & Enquiry Programme) மற்றும் YPL(Yogic Linguistic Programming) முறைகளை உருவாக்கியவர். பழுத்த வேதாந்த அனுபவம் கொண்ட மேலாண்மை குரு.
சுவாமிஜி இங்கிலாந்தில் அத்தாட்சி பெற்ற NPL முறை பயிற்சியாளராக இருந்தவர். கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய போதனா முறைகளில் ஆழ்ந்த ஞானம் உண்டு. மகத்தான பாரம்பரிய ஆசான்களிடம் பயின்ற இவருக்கு அதிநவீன மேலாண்மை உத்திகளுடன் தொடர்ந்து வரும் தொடர்பு உண்டு. முன்னணி தொழிலகங்கள், தங்கள் அதிகாரிகளுக்காக "IN HOUSE WORKSHOP" நடத்த இவரை அழைக்கிறார்கள். சுவாமிஜியின் "LIFE" என்றபெயரில் புகழ்பெற்ற SELF DEVELOPMENT PROGRAMME துணை கொண்டு கூட:டாண்மைத் துறையில் பலரும், ஏராளமான பொதுமக்களும் பலன் அடைந்திருக்கிறார்கள். கூட்டாண்மைத்துறைக்கென்றே விசேசமாக HARMONY & CREATIVITY AT WORK என்ற முறையை சுவாமிஜி அமைத்திருக்கிறார். தியான முறையில் அறிவியல் கண்ணோட்டம் பற்றி இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இளைஞர் முகாம்களை நடத்தி வருகிறார்.
இவற்றைத்தவிர, சுவாமிஜியின் ஊக்குவிப்புடன் வழிகாட்டுதலுடனும் பிரசன்னா டிரஸ்ட், ஆதரவற்ற குழந்தைகளுக்காக பிரசன்ன ஜோதி என்ற அனாதை இல்லமும் நிர்குண மந்திர் என்ற தியானப்பயிற்சி நிலையமும் நடத்தி வருகிறது.
மனசே ரிலாக்ஸ் பிளீஸ் என்ற இவரது புத்தகம் முன்பு எப்போதும் கண்டிராத சாதனை படைத்திருக்கிறது. அதன் ஒலிவடிவத்தை இங்கே தருகின்றோம்.
குரல் கொடுத்தவர்:- "நிழல்கள்" ரவி
